தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹார்மனி OS 2.0;முதல் ஸ்மார்ட்போன் இதுதான்!!

ஹவாய் நிறுவனம் இப்போது ஆண்ட்ராய்டு OS க்கு மாற்றாக, ஹார்மனி OS என்பதை செய்துள்ளது. சமூக வலைத்தளமான வெய்போ தளத்தில் தகவல் கசிவாளரான Digital Chat Station மூலம், ஹவாய் மேட் 40 ப்ரோ 4ஜி பதிப்பு Harmony OS 2.0 உடன் இப்போது புதிய சான்றிதழ் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி வேரியண்ட்டைப் போலவே இதன் விவரக்குறிப்புகளும் இருக்கும். ஆனால் இந்த முறை புதியது, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான EMUI க்கு பதிலாக, புதிய ஸ்மார்ட்போன் ஹார்மனிஓஎஸ் 2.0 உடன் வெளியாகும். இந்த தகவல் உறுதியானால், ஹார்மனிOS 2.0 இடம்பெறும் ஹவாய் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது தான்.

ஹூவாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அதன் ஹவாய் டெவலப்பர் மாநாட்டின் (HDC) போது ஹார்மனிOS 2.0 ஐ அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்தில், நுகர்வோர் வணிக தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் யூ, ஹார்மனி OS ஸ்மார்ட்போனுடன் ஹவாய் தயாராக உள்ளது, ஆனால் ஏற்கனவே கூகிள் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் இருந்ததால் அதை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் தகவலின்படி, இந்த ஹார்மனிஓஎஸ் என்பது பல சாதனங்களில் விரைவான இணைப்பு, திறன் ஒத்துழைப்பு மற்றும் வள பகிர்வுடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வழங்கும்.

மேற்கூறிய புதிய ஹவாய் மேட் 40 ப்ரோ 4ஜி பதிப்பைப் பொறுத்தவரை, கைபேசியின் விவரக்குறிப்புகள் அப்படியே இருக்கும். இதில் 6.76 இன்ச் FHD+ நெகிழ்வான OLED “Horizon” டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 Hz டச் மாதிரி விகிதம், ஐந்து சென்சார்களைக் கொண்ட வட்ட பின்புற கேமரா அமைப்பு, கிரின் 9000 SoC, 12 ஜிபி ரேம் மற்றும் 4,400 mAh பேட்டரி ஆகியவை அடங்கும். பின்புற கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 20 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 12 மெகாபிக்சல் தீர்மானம் கொண்ட 5x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 10x ஹைப்ரிட் ஜூம் ஆகியவை இடம்பெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment