யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற இளம்பெண்ணினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பகல் இளம் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, நாவற்குழி பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
வீதியால் சென்றவர்கள் சுதாகரித்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விட்டனர்.
எனினும், கண்ணீர் விட்டு அழுதபடி பாலத்திற்குள் பாயப் போகிறேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரான்லி வீதியை சேர்ந்த சுமார் 30 வயதான அந்த பெண், காதல் தோல்வியினால் உயிரை மாய்க்க முயற்சித்ததாக கூறினார். தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த அவமானத்துடன் வாழ முடியாமல் உயிரை மாய்க்க வ்ந்ததாக தெரிவித்தார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல, அது முட்டாள்தனமாக முடிவு, காதலும், தோல்வியும் மட்டுமே வாழ்க்கையல்ல என அந்த பெண்ணிற்கு அறிவுர கூறி, அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் ஏ9 வீதியின் நாவற்குழி பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.