Youtubers தங்கள் Google கணக்கை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் சேனல் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தை மாற்ற YouTube இறுதியாக அனுமதி வழங்குகிறது. YouTubers இப்போது தங்கள் Google கணக்கில் காண்பிக்கப்படும் பெயரல்லாமல் வேறுபட்ட சேனல் பெயர் மற்றும் profile photo க்களை வைத்துக்கொள்ள முடியும்.
இப்போது வரை, உங்கள் YouTube சேனல் பெயர் அல்லது profile photo வை மாற்றினால் உங்கள் Google கணக்கிலும், ஜிமெயிலிலும் அதுவே காண்பிக்கப்படும்.YouTube, Gmail மற்றும் பிற சேவைகளுக்கு ஒரே ஒரு Google கணக்கை மட்டுமே வைத்திருக்க விரும்பும் Youtubers க்கு இந்த புதிய அப்டேட் உதவியாக இருக்கும்.
ஆனால் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. உங்கள் Youtube சேனலுக்கு ஏற்கனவே Verification Badge இருந்தால் நீங்கள் சேனல் பெயரை மாற்றும்போது அதை இழக்க நேரிடும் என்று The Verge தெரிவித்துள்ளது.
இந்த புதுப்பித்தலுக்குப் பிறகு தங்கள் சேனல் பெயரை மாற்ற விரும்பினால், YouTube படைப்பாளர்கள் Verification Badge க்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் பேட்ஜ் இல்லாத மற்றவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். தனிப்பட்ட யூடியூபர்கள் மற்றும் பிராண்ட் கணக்குகள் இப்போது அவர்களின் சேனல் பெயர்களை மாற்றத் தொடங்கலாம். யூடியூப் இன்று இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது, மேலும் இது படைப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும்.
உங்கள் YouTube சேனல் பெயரை மாற்றுவது எப்படி?
- டெஸ்க்டாப்பில் YouTube Studio வை திறக்கவும்.
- Menu ஐகானைக் கிளிக் செய்து scroll செய்யவும், Customization எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் சேனல் பெயரை மாற்ற ‘Basic Info’ என்பதைத் தேர்ந்தெடுத்து Pencil ஐகானைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் சேனல் பெயரை மாற்றி கொள்ளலாம்.
மொபைலில் சேனல் பெயரை மாற்ற,
- உங்கள் Profile Photo வை கிளிக் செய்யவும்.
- ‘Your Channel’ என்பதை தேர்ந்தெடுத்து, Edit Channel என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது Pencil icon ஐ கிளிக் செய்து உங்கள் சேனல் பெயரை மாற்றிக்கொள்ளலாம்