31.3 C
Jaffna
May 8, 2021

கிழக்கு

அமரர் ஊர்தியை தடுத்து வைக்கவில்லை!

அமரர் ஊர்தியை நான் தடுத்து வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அந்த வாகனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுத்து வைக்கப்படவில்லையென மட்டக்களப்பு மநாகர சபை ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச அமரர் ஊர்தி சேவைக்கான வானம் மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வாகனம் இடம்மாற்றப்பட்மை தொடர்பில் ஆணையாளருக்கு எதிராக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ளன.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய அறக்கட்டளைக்குரிய பிரதேமேத்தும் வாகனத்தை மாநகர சபை ஆணையாளர் தடுத்துவைத்துள்ளதாக ஊடகங்களில் பொய்யான தகவல்கைளைப் பரப்பி வருகின்றார். உண்மையில் அந்த வாகனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுத்து வைக்கப்படவில்லை. மாநகர சபையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை பாதுகாப்பான முறையில் திருப்பெரும்துறையில் உள்ள எமது சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். மாறாக இந்த வாகனம் சேவையில் ஈடுபடக்கூடாதென்று வானத்தை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக என் எம்மீது குற்றம் சுமத்துவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

உண்மையில் மாநகர சபையில் கடமையாற்றுகின்ற சாரதிகளும் ஏனைய கடமைகளில் ஈடுபடும் வேலையாட்களும் இதனை விரும்பவில்லை. காரணம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாநகர சபை வளாகத்தில் இந்த வாகனத்தை இரவு வேளைகளில் மாத்திரம் நிறுத்தி வைப்பதற்கு சபையூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்மாத்தை மீறி 24 மணித்தியாலங்களும் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே ஊழியர்கள் மத்தியில் மனக்கிலேசங்கள் உருவாகுதற்கு காரணமாக இருக்கின்றமையையும் இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இது தவிர சபையின் எதிர்கட்சியினர் 18 பேரும் இதனை மாநகர சபை வளகத்தில் நிறுத்தி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் இவ்விடயங்களை கருத்தில் கொள்ளாத அறக்கட்டளையானது. பிடிவாத எண்ணத்துடன் விதண்டாவதமாக மாநகர சபை வளாகத்திற்குள் மாத்திரமே நிறுத்தி வைக்க முடியுமென அடம்பிடிக்கின்றனர்.

இது சம்பந்தமாக என்னால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தற்கு அமைய பொலிசார் உரிய விசாரணையை மேற் கொண்டுள்ளனர். விசாரணையின் பிரகாரம் இந்த வாகனமானது எவராலும் தடுத்து வைக்கப்படவில்லையென அறக்கட்டளையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது வாகனத்தை எடுத்து தங்களது பணிகளை முன்னெடுக்குமாறும் அறக்கட்டளைக்கு அறிவித்திருந்தேன். ஆனால் அவர்களை அதனை செய்யாமல் அரசியல் ஆதாயம் தேடுகின்ற ஒரே நோக்கத்திற்காகவும் பொது மக்களின் அனுதாபங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி என்மீது எந்தவித ஆதாரமற்ற பொய்யானதொரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் மாநகர சபையோ மாநகர ஆணையாளரோ எந்தவித சட்டத்திற்கு முரணான வகையில் ஈடுபடவில்லையெனவும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இது சம்பந்தமாக மேலெழுந்தவாரியாக கருத்து தெரிவித்து வருபவர்கள் உண்மைத் தகவலை தகவலறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்டு உண்மையினை விளங்கிக் கொள்ள முடியும் என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

இதேவேளை, மாநகரசபைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தியை சுற்றி கட்டிட இடிபாடுகளை கொட்டிய சம்பவம் அண்மையில் நடந்தது. இதில் ஆணையாளரும் குற்றம்சாட்டப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னைக்குள் சடலம்!

Pagetamil

கடலில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!

Pagetamil

ஒரு பிரச்சனைக்கு தீர்வை கேட்டால் புதிய பிரச்சனைகளை தரும் அரசு: ஸ்ரீநேசன்!

Pagetamil

Leave a Comment