இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வரும் மே மாதம் முதல் கட்டுப்பாடுகளை தளர்ந்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரான்ஸில் இதுவரை 53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானொர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.