ஓப்போ ஐரோப்பாவில் ஓப்போ A94 5ஜி என அழைக்கப்படும் புதிய A-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொலைபேசி மறுபெயரிடப்பட்ட ஓப்போ ரெனோ 5z 5ஜி ஸ்மார்ட்போன் தான், இது இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஓப்போ A94 5ஜி ஒரே ஒரு 8GB + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு EUR 359 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.32,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொலைபேசி காஸ்மோ ப்ளூ மற்றும் ஃப்ளூயிட் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
ஓப்போ A94 5G விவரக்குறிப்புகள்
ஓப்போ A94 5ஜி 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, முழு HD+ ரெசல்யூஷன், 90.8 ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 800 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது.
ஓப்போ A94 5G மீடியாடெக் டைமன்சிட்டி 800U SoC உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை இந்த ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.
ஓப்போ A94 5ஜி ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. மற்ற மூன்று கேமரா சென்சார்களில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் B&W சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, இது 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ஓப்போ A94 5G 4,310mAh பேட்டரியை 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஆதரவுடன் கொண்டுள்ளது. கலர்OS 11.1 UI உடன் சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் விருப்பத்தைக் கொண்டுள்ளது.
இணைப்பு அம்சங்களில் இரட்டை 5ஜி SA / NSA, இரட்டை 4ஜி VoLTE, வைஃபை 802.11 ac (2.4 GHz + 5 GHz), புளூடூத் 5.1, NFC, GPS / GLONASS/ Beidou, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. இது 160.1×73.4×7.8 மிமீ அளவுகளையும் மற்றும் 173 கிராம் எடையையும் கொண்டுள்ளது.