பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அதிகாலையில் அவர்களை வீடுகளில் வைத்து கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த 4 பேரும், முல்லைத்தீவு , வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் கைப்பற்றப்பட்ட படகொன்றுடன் தொடர்புடைய விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. படகிலிருந்த ஒருவருடன் தொலைபேசி தொடர்பிலிருதமை கண்டறியப்பட்டதை தொடர்ந்தே கைது செய்யப்பட்டதாக உத்தியோகப்பர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியையும் படியுங்கள்:- 300 Kg ஹெரோயின், AK துப்பாக்கிகளுடன் இலங்கை மீன்பிடி படகு சிக்கியது!