ஹட்டன் – கினிகத்ஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினருடன் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தை, நெல்சன் பிளேஸை சேர்ந்த 15 வயதான சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கினிகத்ஹேன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கினிகத்ஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1