அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், உலகின் மிக நீளமான நகம் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தனது நகத்தை வெட்டிக் கொண்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நகத்தை நீண்டதாக வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்; குறிப்பாக
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். கடந்த 30 ஆண்டுகளாக தனது நகத்தை வெட்டாமல், உடையாமல் பராமரித்து வந்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் அயன்னா, தனது நகங்களை 19 அடி 10.9 அங்குலம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்தார். அவரது நகங்களுக்கு வண்ணம் பூச, கிட்டத்தட்ட 2 பாட்டில் நெயில் பாலிஷ்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில், அவர் கடந்த வாரம் தனது நகத்தை வெட்டிக் கொண்டார். சரும பராமரிப்பு நிபுணராக இருக்கும் டாக்டர் ஆலிசனிடம் சென்று, தனது நகங்களை எலக்ட்ரிக் மிஷினால் வெட்டிக் கொண்டார். அப்போது அவரது நகம் 24 அடி மற்றும் 0,7 அங்குல நீளத்திற்கு வளர்ந்திருந்தது. இதன் மூலம் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து உள்ளார்.
இதுகுறித்து அயன்னா கூறியதாவது: நான் கடந்த சில தசாப்தங்களாக என் நகங்களை வளர்த்து வருகிறேன். தற்போது நான் ஒரு புதிய வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னிடமிருந்து பிரிய வேண்டிய நேரம் இது. அவர்களை இழக்க போகிறேன் என்பது எனக்கு தெரியும். என் நகங்கள் இல்லாவிட்டாலும் நான் ராணியாகவே இருப்பேன். ஏனெனில் அவை என்னை உருவாக்கவில்லை. நான் தான் அதனை உருவாக்கினேன்’ என்றார்.
இந்நிலையில், அயன்னாவின் நகங்களை டாக்டர் ஆலிசன் வெட்டும் 8 நிமிட வீடியோ, பகிரப்பட்டிருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் அதனை வியப்போடு பார்த்து வருகின்றனர்.