புத்தாண்டை முன்னிட்டு மேலதிக ரயில், பேருந்துகள்!

Date:

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக ரயில்கள் உட்பட கிட்டத்தட்ட 30 ரயில் பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு நாட்கள் மாத்திரம் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புறங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கம் போல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கொழும்பிலிருந்து வேறிடங்களிற்கு செல்பவர்களிற்காக 3,000 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு காலத்தில் வழக்கமாக 500 மேலதிக பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்படும். எனினும், இம்முறை சுகாதார வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அதனால் மக்கள் பிரயாணங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற கோரப்பட்டுள்ளனர்.

இவை காலஅட்டவணையின்படி செயற்படாது. மத்திய பேருந்து நிலையம், பஸ்தியன் மாவத்தை, மகும்புர சாலைகளில் இருந்து மக்களின் தொகைக்கேற்ப புறப்படும்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்