சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற ஒரு குழுவினர், மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் (6) கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொண்டச்சிக்குடா வீதித்தடையில் சந்தேகத்திற்கிடமான 04 முச்சக்கர வண்டிகளை கடற்படையினர் சோதனையிட்டதை தொடர்ந்து, 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கடல்மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அந்த பகுதிக்கு வந்ததாக கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களில் 14 ஆண்கள், 04 பெண்கள், 13 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவர்.
முல்லைத்தீவை சேர்ந்த 9 பேர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த தலா 4 பேர், வாழைச்சேனை, வத்தளை, புத்தளம் பகுதிகளை சேர்ந்த தலா ஒவ்வொருவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகிறார்.
கைது செய்யப்பட்டவர்களும், அவர்கள் பயணித்த 04 முச்சக்கர வண்டிகளும் சிலாவத்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.