தலவாக்கலை நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் இன்று (7) பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஹட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், லிந்துலை நகரசபை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.
நகரில் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்தினர்.
பல வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகங்கள் சிலவற்றின் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், மீன் விற்பனை நிலையமொன்றில் பாவனைக்கு உதவாத மீன்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1