29.1 C
Jaffna
May 11, 2021

முக்கியச் செய்திகள்

இலங்கை தோல்வியடைந்த நாடாகியதற்கு ஒற்றையாட்சியே காரணம்: மாநிலங்களின் ஒன்றிய வரைபை சமர்ப்பித்தது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி!

நாட்டின் இன்றைய பேரழிவுச் சூழலுக்கும் பின்னடைவு நிலைமைக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையே காரணம். பொருளாதார ரீதியிலும் பிற விடயங்களிலும் இலங்கை தோற்றுப்போன நாடாக துவண்டு கிடப்பதற்கு ஒற்றையாட்சி முறைமையே முழு காரணமாகும். சமஸ்டி அல்லது கூட்டாட்சி முறையிலான அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டால்த் தான் இந்த நாடு மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும் என்பதை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இலங்கைக்குள் மாநில மற்றும் தன்னாட்சி பிராந்தியங்களை கொண்ட- சுவிற்சர்லாந்து பாணி- ஆலோசனையையும் முன்வைத்துள்ளனர்.

அந்தக் கூட்டணி சார்பில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன்,  அனந்தி சசிதரன், செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டணியினர் அங்கு தெரிவித்த கருத்துக்களின் சாரம் பின்வருமாறு-

வரலாற்றுரீதியான இந்த தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்தன. பெரும்பான்மையின சிங்கள மொழி பேசும் கோட்டை,, கண்டி இராஜ்ஜியங்களும், தமிழ் பேசும் யாழ்ப்பாண இராச்சிகளும் இருந்தன. எனினும், நிர்வாக வசதிக்காக ஒரே நிர்வாக அலகை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர்.

ஆங்கிலேயர் தீவை ஒப்படைத்த போது அதன் பல்லின தன்மையை உணர தவறிவிட்டனர்.

பொருத்தமற்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஆங்கிலேயர் எம்மிடம் ஒப்படைத்தனர். பெரும்பான்மையினரால் தமிழ் மக்கள் மிருகத்தனமாக அடக்கப்படுவற்கு அது அனுமதித்தது.

நம் வரலாற்றில் தமிழர்களின் ஒரு பகுதியினர் பௌத்தர்களாக இருந்தனர். கி.பி 6,7ஆம் நூற்றாண்டிரேயே சிங்களம் வந்தது. அதற்கு முன்னர் இங்கு சிங்களவர்கள் வாழவில்லை. எனினும், வரலாற்று திரிவு இடம்பெறுகிறது. தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பது தவறானது.

இலங்கை ஒரு பல்லின – பல்மத- பன்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதை இலங்கை அரசு ஏற்று இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிக்கும் அரசியலமைப்பு மூலமே நாட்டை மேம்படுத்த முடியும்.

தமிழ் மக்கள் மீது சிங்களவரின் பெரும்பான்மையின் மூலம் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை இன்று பெரும் தோல்வி கண்டுவிட்டது. இன்று நாடு எதிர்கொண்டுள்ள பேரழப்புக்களுக்கும், பின்னடைவுகளுக்கும் அவலங்களுக்கும் அது மட்டுமே காரணம். அதனால்தான் அதில் இருந்து வெளியேறுமாறு நாம் அழைக்கின்றோம்.

சமஷ்டியும் கூட்டாட்சியும் பிரிவினை அல்ல. ஒன்றுபட்டு ஐக்கியமாக வாழ்வதற்கு உரிய உயரிய முறைமைகளே அவை.

நாடாளுமன்றத்துக்கு பதில் கூறக்கூடிய- பிரதமருக்கு கீழ் நிறைவேற்று அதிகாரம் பிரயோகிக்கப்படும் ஒரு முறை என்றால் அதன் கீழ் சமஸ்டி முறை அரசியல் அமைப்பையும்-

அப்படியல்லாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்வதாக இருந்தால் கூட்டாட்சி முறை அரசியல் அமைப்பையும் ஏற்படுத்துவதே நாட்டின் மேன்மைக்கு ஒரே வழியாகும்.

உலகநாடுகள் பலவற்றிலும் பல்லின, பல்மொழி, பல் சமூக தேசங்களை ஒன்றணைக்கும் உயரிய ஆட்சிமுறையாக இந்த இரண்டுமே உள்ளன.

சிறுபான்மையின மக்களையும் உள்வாங்கும் ஒரு அரசியலமைப்பை இலங்கை உருவாக்க வேண்டும் என்றால் இந்த இரண்டில் ஒன்றுக்கு இணங்குவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.

முஸ்லிம் பகுதி ஒரு தன்னாட்சி யூனியன் பகுதியாக இருக்கும். இதன் அளவு, அதிகார வரம்பு பற்றி தமிழ் மக்கள் மத்தியில் விவாதி்க்கப்பட வேண்டும். இதேபோல, மலையக தமிழ் மக்களிற்குமான அதிகார ஏற்பாடு விவாதிக்கப்பட வேண்டும்.

நாட்டின் தன்மை

இலங்கை மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும். கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று முன்னாள் இராஜ்யங்களுடன் பல்லின கலாச்சார மக்கள் வாழும் தலைநகர் கொழும்பு ஆகிய நான்கு மாநிலங்களை உருவாக்குதல்.

தமிழ் பேசும் மாநிலம் வடகிழக்கு மாநிலம் என்று அழைக்கப்படும். மற்றவர்களை கோட்டை மாநிலம், கண்டி மாநிலம் மற்றும் தலைநகர மாநிலயம் என அடையாளம் காணலாம்

மொழி

எந்தவொரு மொழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் நமது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக சிங்கள, தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும்.

மூன்று மொழிகளுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் மூன்று மொழிகளுக்கும் இத்தகைய உத்தியோகபூர்வ அந்தஸ்தை வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாநிலமும் உத்தியோகபூர்வ நிர்வாக மொழியையும் அதன் எல்லைக்குள் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் மொழியையும் தீர்மானிக்கும்.

கல்வித் துறையில் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் ஆரம்பக் கல்வியை அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டும்.

5 ஆம் வகுப்பில், அவர்களின் தாய்மொழி அல்லாத சிங்கள அல்லது தமிழ் பற்றிய கட்டாய அறிவு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தரம் 8 க்குள் அவர்களுக்கு ஆங்கில மொழி பற்றிய அறிவு கட்டாய இணைப்பு மொழியாக வழங்கப்பட வேண்டும்.

க.பொ.த உயர்தரம் அல்லது எந்தவொரு உயர் கல்வியும் பெறும் அனைத்து மாணவர்களும் க.பொ.த. சாதாரண தரத்தில் அல்லது தொடர்புடைய பரீட்சையில் 3 மொழிகளிலும் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வரைபை முழுமையாக படிக்க இங்கு அழுத்துங்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கோட்டாபய தொலைபேசியில் மிரட்டினார்; ஆளுந்தரப்பு எம்.பி விஜயதாஷ ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு: பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கும் விடுமுறை!

Pagetamil

சூட்கேஸில் சடலம்: 26 வயது யுவதியே கொல்லப்பட்டார்; பயணிகள் பேருந்தில் சடலம் கொண்டு வரப்பட்டது! (PHOTOS)

Pagetamil

Leave a Comment