கோப்பாயில் கொடூர கும்பலிடமிருந்து தப்பியோடிய காணி உரிமையாளர்!

Date:

யாழ்.கோப்பாயில் காணி வேலி கதியாலை வெட்டி எரியூட்டிய போது அதனை காணி உரிமையாளர் தடுத்த போது அவர் மீது கும்பலாக வந்து தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர் அவர்களிடம் இருந்து மீண்டு தப்பி ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் மத்தி நீமசிட்டி பகுதியில் இன்று (06) அதிகாலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வேலி கதியாலை வெட்டி வேலி அருகில் போட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதனை பார்த்த காணி உரிமையாளர் மறித்த போது வேலி கதியாலை வெட்டி எரித்தவருக்கும் காணி உரிமையாளருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன் போது வேலிக் கதியாலை வெட்டி எரித்தவருடன் கூட இருந்த கும்பல் காணி உரிமையாளர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். ஒருவாறு அந்த கும்பலில் இருந்து காணி உரிமையாளர் தப்பி ஓடியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து தப்பி வந்த காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்