29.3 C
Jaffna
April 22, 2021

முக்கியச் செய்திகள்

வெள்ளை வான் போலிப்பரப்புரை தோல்வியடைந்ததாலேயே இப்போது சுற்றாடல் பிரச்சனையை கையிலெடுத்துள்ளனர்: வவுனியாவில் கோட்டா!

நான் அதிகாரத்திற்கு வரும்போது வெள்ளை வாகனம், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரச்சாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரச்சாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது சுற்றாடல் பற்றி போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

நேற்று (03) முற்பகல் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் 17வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகவே ஆகும். பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும்.

சுற்றாடலுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்துள்ளது. தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றி வளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளது.

நான் அதிகாரத்திற்கு வரும்போது வெள்ளை வாகனம், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரச்சாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரச்சாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது சுற்றாடல் பற்றி போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர். நிறுவனமயப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்திற்கும் தனக்கும் எதிராக முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களை தோல்வியுறச் செய்து என்னை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த கொள்கையை பாதுகாக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே நான் நிறைவேற்றி வருகிறேன்

தமது பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கின்ற காரணத்தினால் சில பிக்குகளுக்கு சாசனப் பணியை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே சாசனத்திற்காக பிள்ளைகளை வழங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் தொழில் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இராயப்பு ஜொசெப் ஆண்டகையின் மறைவிற்கு அரசியல் கைதிகளின் அஞ்சலி!

Pagetamil

3வது நாளாக சுகாதார தொண்டர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!