28.2 C
Jaffna
April 20, 2024
உலகம்

விபச்சார அழகிக்கு கட்டணம் செலுத்த அயல்வீட்டில் திருட முயன்ற இளைஞனுக்கு சிறை!

விபச்சார அழகிக்கு செலுத்த வேண்டிய பணத்திற்காக பக்கத்து வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற இளைஞனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின், மன்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கணினி அறிவியல் ஆசிரியரான அடம் மொரிசன் (27) தெற்கு மான்செஸ்டரில் உள்ள டிட்ஸ்பரி நகரைச் சேர்ந்தவர். அயல்வீட்டிற்குள் திருடச் சென்ற னை அடித்து துவைத்து கட்டி வைத்தார். அப்போது, அயல்வீட்டு யுவதியின் உள்ளாடைகளை தனது காற்சட்டை பொக்கற்றிற்குள் அவர் எடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

ஒரு ‘பக்கிங் மற்றும் உதைத்தல்’ மோரிசனை அந்தப் பெண்ணின் காதலன் வென்றார், அவனது பாக்கெட்டுகள் அவனது பாதிக்கப்பட்டவரின் உள்ளாடைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.

கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

மொரிசனும், அவரது கணக்காளர் சகோதரருடன் பிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.  சகோதரர் இல்லாத நிலையில், விபச்சார அழகியொருவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அதிக கட்டணம் அறவிடும் உயரடுக்கு அழகியொருவரையே அவர் அழைத்திருந்தார்.

அவர்களது குடியிருப்பிற்கு அருகில், கிரேஸ் கோய்ன் மற்றும் சாம் ரைட் ஆகியோர் தங்களது மூன்றாவது மாடி பிளாட்டில் 18 மாதங்களாக வசித்து வந்தனர், இருவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள், இரவு 11 மணிக்கு படுக்கைக்குச் சென்றிருந்தனர்.

ஏதோ சத்தம் கேட்டு கோய்ன் வெளியே வந்தார். ஒரு இருண்ட உருவம் நிற்பதைக் கண்டார்.

கோய்ன் மீண்டும் படுக்கையறைக்குள் ஓடி, தனது காதலன் சாம் ரைட்டிடம் பிளாட்டில் யாரோ ஒருவர் இருப்பதாக கத்தினார்.

‘சாம் ரைட் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து ஓடிச் சென்றார். திருட வந்தவர் தப்பியோட முனைய, அவரது தலையில் சாம் ரைட் ஓங்கிக் குத்தியதில்  தரையில் விழுந்தார்.’

முகமூடி அணிந்திருந்த திருடன், கையில் உளிகளையும் வைத்திருந்தான்.  இரண்டு நிமிட போராட்டத்தில் திருடனை தரையில் விழுத்தி கட்டுப்படுத்தினார் சாம் ரைட்.

இதற்குள் காதலி கிரேஸ் கோய்ன் பொலிஸை அழைத்தார்.

அதிக கட்டணம் பெறும் விபச்சார அழகியை வீட்டிற்கு அழைத்தேன்.அவருக்கு கட்டணம் செலுத்த பணமில்லை. அதனால் அண்டை வீட்டில திருட முன்றேன் என அவர் வாக்குமூலத்தல் தெரிவித்துள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2024 இறுதிக்குள் ரஷ்யாவிடம் உக்ரைன் தோல்வியடைந்து விடும்: சிஐஏ இயக்குனர்!

Pagetamil

ஈரானுக்குள் எவ்வாறான தாக்குதல் நடந்தது?

Pagetamil

ஈரானுக்குள் வரையறுக்கப்பட்ட தாக்குதல்: இஸ்ரேல் தரப்பில் தகவல்!

Pagetamil

சிரியா, ஈராக் இலக்குகள் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!

Pagetamil

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

Leave a Comment