உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளின் சகோதரரிடம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மன்னிப்பு கோரியிருந்ததாக, தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மைத்திரியும், ரணிலும் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தபோது அவரிடம் மன்னிப்பு கேட்டதாக அமெலி மற்றும் டேனியல் லின்சியின் சகோதரர் டேவிட் லின்சி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 260 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த கொடிய தாக்குதலின் இண்டாவது வருட நினைவு நெருங்கி வருகிறது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சுற்றுலாப் பயணிகளில் அமெலி மற்றும் டானியல் லின்சி ஆகியோர் அடங்குவர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட இவர்கள், கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் தங்கள் தந்தையுடன் காலை உணவை உட்கொண்டிருந்தனர். ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் அமெலியும் டானியலும் கொல்லப்பட்டனர்.
தற்போது ஊடகங்களுடன் பேசியுள்ள அவர்களின் சகோதரன் டேவிட் லின்சி, தற்கொலைதாரிகளை மன்னிக்க தற்போதைக்கு தயாரில்லையென தெரிவித்துள்ளார்.
“இதுவரை அப்படியான முடிவிற்கு வரவில்லை. இப்போதைக்கு மன்னிப்பது துரோகமாக இருக்கும்் என கூறியுள்ளார்.
நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.