31 C
Jaffna
April 23, 2021

இலங்கை

புலிகளின் மௌனிப்பிற்கு பின் தமிழினம் நம்பிய ஒரே ஒப்பற்ற மாமனிதர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை!

புலிகளின் மௌனிப்பிற்கு பின் தமிழினம் நம்பிய ஒரே ஒப்பற்ற மாமனிதர் நெருக்கடியான கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கு அரனாக இருந்தவர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை.அவரின் இழப்பை ஒரு போதும் ஈடு செய்ய முடியாது என தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

-அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

ஒடுக்கப்பட்ட இனத்தின் நீதியின் குரலாக எந்த விதமான தயக்கமும் இன்றி சமரசமின்றி விடுதலை வேள்வியில் தன்னை ஈர்த்துக்கொண்டவர்.

2009ல் இன அழிப்பே நடந்ததாக உரத்துக் கூறியவர். அறத்தின் வழி நின்று சர்வதேச நீதி கோரியவர். கண் முன்னே நிகழ்ந்த பல படு கொலைகளுக்கு சாட்சியாக இருந்தவர்..

எந்த மிரட்டல்களுக்கும் அடி பணியாமல் உண்மையை உரத்துக் கூறியவர் அதனால் அவர் எதிர் கொண்ட விளைவுகள் எண்ணற்றவை.

புலிகளின் மௌனிப்பிற்கு பின் தமிழினம் நம்பிய ஒரே ஒப்பற்ற மாமனிதர் நெருக்கடியான கால கட்டத்தில் தமிழ்மக்களுக்கு அரனாக இருந்தவர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு , தமிழ் கட்சிகளின் ஒற்றுமை ஆகியவற்றுக்காக தனது அதிக நேரத்தை செலவிட்டவர். தமிழ்த்தேசிய அரசியல் இருப்பில் பெரும் பங்காற்றியவர்.

உலக உணவு திட்டத்தின் புள்ளி விபரத்தை கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் காணாமல் போயிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தவர்.

இரானுவமே வெளியேறு எனும் தலைப்பிலான முதலாவது நில அபகரிப்பு போராட்டத்திலும் கலந்து பல புள்ளி விவரங்கள் கூறியவர். முள்ளிக்குளம் காணி விடுவிப்பதற்காக பல முனைப்புக்களை மேற்கொண்டவர்.

எவ்வளவு இக்கட்டான சூழ் நிலைகள் வந்தாலும் சாமானியனின் குரலாக ஒலித்தவர்.இவருடைய இழப்பு என்பது இயற்கை இடை வெளியை நிரப்பும். காலம் நிலையியலை நிர்ணயித்துக் கொள்ளும் என்பதை பொய்யாக்கி மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மதம் கடந்து இனத்தையும் மொழியையும் விசுவசித்தவர். தமிழர்களின் கோட்பாடு ரீதியான போராட்டத்தை தார்மீக ரீதியாகவே ஆதரித்தவர்.

ஆகவே ஆண்டகை விட்டுச் சென்ற விடுதலைப் பணியை உண்மையோடும் சத்தியத்தோடும் விசுவாசத்தோடும் நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டியதே அவருக்கு செய்யும் ஆத்தம அஞ்சலியாகும்.என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

மண் அகழ தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு!

Pagetamil

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மீட்கக்கோரி பெண்கள் போராட்டம்!

Pagetamil

UPDATE: முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு (PHOTOS)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!