பாரிஸ் நகருக்கு வெளியே Arnouville பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலத்தைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க இந்தியப் பூர்வீகம் கொண்ட பெண்ணின் சடலம் அது என்று சந்தேகிப்பதாகவும் ஆளை அடையாளம் காணக்கூடிய ஆவணங்கள் எதுவும் சடலத்துடன் காணப்படவில்லை என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
வல- துவாஸ் மாவட்டம் Arno uville-Val-d’Oise மரத்தோப்புப் புறத்தில் அந்த சடலத்தை தேனீ வளர்ப்பாளர் ஒருவர், புதன்கிழமை கண்டார். அதற்கு முதல்நாள் மாலையில் அந்த பகுதியினால் அவர் கடந்து சென்ற போதும், சடலமெதுவும் இருந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதனால் இரவிலேயே கொலை நடந்திருக்கலாமென அவர் தெரிவித்தார்.
மரம் ஒன்றின் அடியில் சடலம் கிடந்த இடத்தில் இரத்தம் காணப்படுவதால் அவர் அந்த இடத்தில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உள்ளாடைகள் அரைகுறையாகக் களையப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தின் கழுத்திலும் முகத்திலும் ஆழமான காயங்கள் காணப்பட்டன.
கொலை தொடர்பான விசாரணைகளை பாரிஸ் Versailles குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.