முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த 38 வயதுடைய குறித்த நபர் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாத கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பு- முன்னைய செய்தியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைதானதாக செய்தி வெளியாகியிருந்தது. அது தவறானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1