கொரோனா அபாயம் காரணமாக தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திற்கு தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு தலா 2000/= ரூபா பெறுமதியான சுமார் 100 அத்தியாவசிய உலருணவுப் பொதிகளே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் திருநெல்வேலி மத்தி வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் வைத்து சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகன் சுவாமிகளால் உதவிப்பொருட்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1