மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் அட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களை எடுத்துள்ளது.
2 விக்கெட் மாத்திரமே கைவசமுள்ள நிலையில், மேற்கிந்தியத்தீவுகளை விட 104 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
இலங்கை- மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய நாள் முடிவில்,மேற்கிந்தியத்தீவுகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 103.1 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 250 ஓட்டங்கள பெற்றது.
தினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 39 ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 20 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 6 ஓட்டங்களுடனும், துஷ்மந்த சாமர 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க பதும் நிஷாங்க 49 ஓட்டங்களுடனும், லசித் எம்புல்தெனிய எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முதலில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸுக்காக 111.1 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்களை பெற்றது.