புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான மூலப்பொருட்கள் உள்ளடங்கிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் என சந்தேகிக்கும் இரண்டு பவுஸர்கள் தங்கொட்டுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு (119) கிடைத்த தகவலை அடுத்து இவ்வாறு 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பவுஸர்கள் இரண்டின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பவுஸர்களில் உள்ள எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1