25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் (2021.03.29)

2021.03.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. ‘e – கிராம உத்தியோகத்தர்’ கருத்திட்டம்

கிராம உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான தகவல்களைத் திரட்டிப் பேணும் வகையிலும், பயன்படுத்துவதற்கும், தேவையான தகவல் திரட்டுக்களைத் தயாரிப்பதற்காகவும் ‘e-கிராம உத்தியோகத்தர்’ கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் 04 பிரதேச செயலகப் பிரிவுகளில் 162 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடி கருத்திட்டத்திற்கமைய, இரண்டாம் கட்டமாக 7000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மை நிறுவனத்தின் ஆலோசனை உதவிகளைப் பெற்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு குறைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் மற்றும் கொழும்புக்கு வெளியே ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் குறைத்தல் மற்றும் சுற்றாடல் நேய நிலைபேறான நகரமயமாக்கல் தொடர்பாக 2021 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வெள்ளப்பெருக்கு குறைக்கும் கருத்திட்டம் இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் அடையாளங் காணப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 2,800 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீட்டின் மூலம் குறித்த கருத்திட்டத்தை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. நைதரசன் அடங்கிய இரசாயன பசளைப் பயன்பாடு தொடர்பான ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

ஆசிய வலயத்தில் இரசாயனப் பசளையை (குறிப்பாக நைதரசன்) சரியான வகையில் முகாமைத்துவப்படுத்தாமையால் இடம்பெறும் சுற்றாடல் பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு, சர்வதேச நைதரசன் முகாமைத்துவ முறைமைகள்உடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தில் (United Nation Environment Programme – UNEP) தலைமையில், பல்வேறு பயிர்ச்செய்கைகளில் நைதரசன் அடங்கிய இரசாயன பசளைப் பயன்பாடு தொடர்பாக தெற்காசிய வலயத்தில் பல்நோக்கு ஆய்வு முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ஆய்வுக் கற்கைகள் தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளில் (மரக்கறி – நுவரெலியா மற்றும் கற்பிட்டி) (நெல் – அநுராதபுரம்) நைதரசனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பசுமை வாயு வெளியேற்றம் தொடர்பான தகவல்களை திரட்டல், அது தொடர்பாக விவசாயிகளைத் தெளிவூட்டல், மலையகக் காடுகளில் குறைந்த தாவரப் பல்வகைமையின் அடிப்படையில் வளிமண்டலம் மாசுபடுவதை அடையாளங் காணல் மற்றும் நைதரசனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்காக ஆரோக்கியமான நைதரசன் முகாமைத்துவ முறைமைகளை உருவாக்குவதற்காக விவசாய சமூகத்தையும் ஏற்புடைய தரப்பினர்களையும் தெளிவுபடுத்தல் போன்ற பணிகள் இக்கருத்திட்டத்தின் கீழ் 05 வருடகாலத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பேராதனைப் பல்கலைக் கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்க  (United Kingdom Research and Innovation – UKRI)  நிறுவனம், உலகளாவிய சவால்கள் ஆராய்ச்சி நிதியம் (Global Challenges Research Fund – GCRF)  தெற்காசியாவில் நைதரசன் மையம் (International Nitrogen Management System – INMS)  இற்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. பேராதனைப் பல்கலைக் கழகம் மற்றும் கனடா சர்வதேச ஆராய்ச்சி நிலையம்  (International Development Research Centre – IDRC)) இற்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டுதல்

கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதன் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக பல்வேறு மூலோபாயங்களை பல நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனாலும், சில நாடுகள் பின்பற்றுகின்ற பல்வேறு மூலோபாயங்களால் பெண்க்ள, சிறுவர்கள், மற்றும் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்ட சமூகங்களக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையையும் மலேசியாவையும் அடிப்படையாகக் கொண்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பேராதனைப் பல்கலைக் கழகம் மற்றும் கனடா சர்வதேச ஆராய்ச்சி நிலையம் (International Development Research Centre – IDRC)  இற்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. உருஹூனு பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக் கழகத்தின் சுற்றாடல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானம் தொடர்பான கல்லூரி (Graduate School of Environment and Life Science, Okayama University, Japan)  இற்கிடையிலான ஒப்பந்தத்தை எட்டுதல்

உயர்கல்வி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் உருஹூனு பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக் கழகத்தின் சுற்றாடல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானம் தொடர்பான கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இருதரப்பினர்களுக்கும் இடையே மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம், பீடங்கள் மற்றும் பணிக்குழாம்களின் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஒத்துழைப்பு ஆய்வுகளை மேற்கொள்வதும் ஆராய்ச்சித் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பத்தில் 05 வருடகால குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளின் மேம்பாட்டுக்காக ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தலைமைக் காரியாலயத்திற்கு, வேரஹர காரியாலயத்திற்கு, மாவட்ட மட்டக் காரியாலயங்களுக்கு நாளாந்தம் அதிகளவிலான சேவை பெறுநர்கள் வருகை தருகின்றனர். அதனால் சேவை பெறுநர்களும் திணைக்களத்தின் பணியாளர்களும் சில வேளைகளில் சிரமங்களை எதிர்கொள்வதால், அதற்குத் தீர்வாக முற்கூட்டியே தமது சேவைகளுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக இலக்கத்தை பெற்றுக் கொள்ளவும், சேவைகளின் தேவைக்கேற்ப சேவைப் பிரிவுகளை நாடுவதற்கு வழிகாட்டல் மற்றும் குறுந்தகவல் மூலம் குறித்த தகவல்களை சேவைபெறுநர்களுக்கு அறிவித்தல், போன்ற பணிகளுக்காக நவீன தகவல் தொடர்பாடல் தொழிநட்பத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் குறித்த கருத்திட்டம் நாராஹேன்பிட்டி, வேரஹர மற்றும் இணையவழி வசதிகளுடன் கூடிய 05 மாவட்ட காரியாலயங்கள் நடைமுறைப்படுத்துவதற்கும் மேலும் 19 காரியாலயங்களில் கருத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் சுழல் விசை இயக்கி (சைக்லோரோன்) கதிர்வீச்சு ஓளடதங்கள் உற்பத்தி நிலையத்தை அமைத்தல்

கதிர்வீச்சு மருந்தான ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் (18F- FDG) மருந்து, புற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் Pநுவு மற்றும் ஊவு பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. குறித்த மருந்தை உற்பத்தி செய்வதற்காக சுழல் விசை இயக்கி (சைக்லோரோன்) எனும் விசேட உபகரணம் பயன்படுத்தப்படுவதுடன், அதற்கான வசதிகள் இலங்கையில் இல்லாததால், குறித்த கதிர்வீச்சு மருந்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. குறித்த மருந்தில் காணப்படும் கதிரியக்கம் தேய்வடையும் இயல்பால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் போது மருந்தின் இயலளவில் 97மூ வீதமானவை இழக்கப்படுவதுடன், எஞ்சுகின்ற இயலளவில் 10 நோயாளர்களுக்கு மாத்திரம் சிகிச்சையளிப்பதற்கு இயலுமாக உள்ளது. அதனால், வருடாந்தம் 30,000 நோயாளர்களைப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டிய தேவையிருப்பினும், 1,600 பேர் வரையான நோயாளர்களை மாத்திரமே பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. குறித்த இறக்குமதி செய்யப்படும் மருந்தைப் பயன்படுத்தி நோயாளி ஒருவரைப் பரிசோதிப்பதற்காக 54,000 ரூபாய்கள் செலவாகின்றதுடன், உள்ளூரில் குறித்த மருந்தை உற்பத்தி செய்தால் 14,000 ரூபாய்களுக்குக் குறைத்துக் கொள்ள முடியுமென கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலைமையை கருத்தில் கொண்டு, இலங்கை அணுசக்தி சபை, ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் ப்ளோரோ டியொக்சி குளுக்கோஸ் (18F- FDG) மருந்து உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு வேரஹரவில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை வளாகத்தில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பிரதேச கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணித்துண்டுகளை ஒதுக்குதல்
பிரதேச கைத்தொழில் சேவைகள் குழு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு நாலந்த (மாத்தளை), பட்டஅத்த, கரந்தெனிய, உடுகவ, எம்பிலிப்பிட்டி, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நவகம்புர போன்ற 09 கைத்தொழில் பேட்டைகளில் 16 காணித்துண்டுகள் புதிதாக தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதலீட்hளர்களுக்கு ஒதுக்கி வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 35 வருடகால குத்தகை அடிப்படையில் ‘வேறு தரப்பினர்களுக்கு மாற்றி வழங்கப்பட முடியாத’ நிபந்தனையின் மற்றும் ஏற்புடைய ஏனைய நிபந்தனைகளின் அடிப்படையில், குறித்த காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. பெற்றோலியப் பொருட்கள் பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை அறிமுகம் செய்தல்

பெற்றோலிய தொழிற்துறைக்கு ஏற்புடைய அனைத்துச் செயற்பாடுகளுக்குமான பொறுப்பு ஆரம்பத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது பல்வேறு தரப்பினர்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தாலும், குறித்த நிறுவனத்தின் பணிகள் மசகு உராய்வு எண்ணெய் பொருட்களுக்கான தொழிற்துறையின் கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல்களில் மாத்திரம் அமைச்சுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையில் பெற்றோலியப் பொருட்கள் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையொன்று உருவாக்கப்படவில்லை. அதனால், பாவனையாளர் முறைப்பாடுகளை பெறல் மற்றும் தீர்வு காண்பதற்காக சுயாதீன வெளிப்பாட்டுத் தன்மையுடன் கூடிய பொறிமுறையொன்று எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த முன்மொழியப்பட்ட பொறிமுறை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகார சபை, இலங்கை சுங்கம், இலங்கை பொலிஸ், இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஏற்புடைய நிறுவனங்கள் தொடர்புபடுகின்றது. அதற்கமைய, சட்டமூலமாக்கப்பட்டுள்ள ‘பாவனையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று’ மற்றும் ‘முறைப்பாடுகளை கையாளும் பிணக்குகள் தீர்க்கும் நடைமுறைகள்’ போன்றவற்றை அமுல்படுத்தவும், அதற்காக ஏற்புடைய அரச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு Single Sleeper Multiple Tie Tamping உபகரணத்தை திட்டமிடல், தயாரித்தல், விநியோகித்தல், நிறுவுதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தலுக்கான பெறுகை

புகையிரதத் திணைக்களத்தின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்கும் Single Sleeper Multiple Tie Tamping உபகரணத்தை தயாரித்து வழங்குவதற்காக சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகை 4.96 அமெரிக்க டொலர்களுக்கு M/s Matista Material Industrial S,A Switzerland கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கொழும்பு – கண்டி (A 001) (கிலோமீற்றர் 4410300 இருந்து கிலோமீற்றர் 10010000 வரைக்குமான) வீதியைப் புனரமைத்தல்,

மேம்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்காக குடியியல் வேலைகள் ஒப்பந்தங்கள் பக்கேஜ் நான்கினை வழங்கல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையுடன் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பு – கண்டி (A 001) (கிலோமீற்றர் 4410300 இருந்து கிலோமீற்றர் 10010000 வரைக்குமான) வீதியைப் புனரமைத்தல், மேம்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்காக 04 குடியியல் வேலைகள் ஒப்பந்தங்கள் பக்கேஜ்களுக்கான உள்ளூர் போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய 15 விலைமனுதாரர்களால் 47 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய தெரிவு செய்யப்பட்ட கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய விலைமனுதாரர்கள்களுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 1996 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் திருத்தப்பட்ட 1916 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க (182 ஆம் அத்தியாய) சுடுகலன்கள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

இறுதியாக 1996 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் திருத்தப்பட்ட 1916 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க (182 ஆம் அத்தியாய) சுடுகலன்கள் கட்டளைச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2007 யூன் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அடிக்கடி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களால் சட்டவாக்கப் பணிகள் தாமதமாகியுள்ளது. அதனால் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் ஏற்புடைய அனைத்துத் திருத்தங்களையும் உள்வாங்கி சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. தேசிய சமுதாய குடிநீர் அபிவிருத்தி சட்டத்தை தயாரித்தல்

தேசிய சமுதாய நீர் வழங்கல் அபிவிருத்தி திணைக்களம் நிறுவப்பட்ட பின்னர், சமூகத்தால் முகாமைத்துவப்படுத்தப்படும் சமுதாய மட்ட அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் வலுவூட்டல் குறித்த திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றது. அனாலும், அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் குறித்த திணைக்களத்திற்கு இன்மையால், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தேசிய சமுதாய நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிகள் முறையாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேசிய சமுதாய குடிநீர் அபிவிருத்தி சட்டத்தை தயாரிப்பதற்காக நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. குடியியல் சட்டக்கோவை திருத்தம்

அண்மைக் காலத்தில் மோட்டார் வாகன விபத்துக்கள் அதிகளவில் அதிகரித்துள்ளன. அவ்வாறான விபத்துக்களால் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குடியியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது தரப்பினரால் சட்ட மருத்துவ அறிக்கை மற்றும் ஏனைய மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதுடன், அவை கட்டாயமாக ‘உறுதிப்படுத்தலின் கீழ்’ சமர்ப்பிக்கப்படும் அறிக்கையாக கருதப்படும். குறித்த அறிக்கைகளில் உள்ளடங்கிய விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக சாட்சி வழங்குவதற்கு குறித்த மருத்துவர் நீதிமன்றத்திற்கு ஆஜராவதை உறுதிப்படுத்திக் கொள்வதை பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரது தரப்பினருக்கோ ஒப்படைக்கப்படும். அவ்வாறான வாகன விபத்து வழக்கை முடிவுறுத்துவதற்காக 10 தொடக்கம் 12 வருடகாலம் செல்கின்றமையால், குறித்த மருத்துவர் தொலைதூரப் பிரதேசங்களில் கடமையாற்றுபவர் எனின், அவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு மேலதிக செலவுகளை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவருடைய பெறுமதியான நேரத்தை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களும் இழக்கப்படுகின்றது. இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு, சட்ட மருத்துவ அறிக்கை, உடற்கூற்றுப் பரிசோதனை, குறித்துக் காட்டப்பட்டுள்ள சாட்சியங்களாக கருதுவதற்கான ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்கும், அதனை பாதிக்கப்பட்டவர் உடன்படாவிட்டால் மருத்துவ சாட்சியங்களை நிராகரிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவருக்கே ஒப்படைக்கும் வகையில் ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் இயலுமான வகையில் குடியியல் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்காக சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

Pagetamil

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Pagetamil

18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment