நேற்று (29) பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
அதன்படி, நாவலப்பிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கம்பளை நோக்கி செல்லும் சுமார் 500 மீட்டர் தூரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.
பிரதான வீதியில் சுமார் மூன்று அடி வெள்ள நீர் நிறைந்திருந்தது.
இலேசான மழைக்கே நாவலப்பிட்டி நகரம் மூழ்குவதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1