யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 21 பேர், வவுனியா மாவட்டத்தில் 2 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் வசிக்கும், யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
இதுவரை, யாழ் மாநகரசபையின் 3 உறுப்பினர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர், கண்டாவளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த தலா ஒவ்வொருவர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.