தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரி மாங்குளத்தில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமல் இன்றும் காணப்படுகின்றது
இந்நிலையில் வீட்டுத்திட்டத்தை பெற்றவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்பட்ட போதும் மீதி கொடுப்பனவு வழங்கப்படாமை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது கொடுப்பனவை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்