தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்களை கொண்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுங்கப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்ரிய தெரிவித்துளளார்.
இன்று ஒரு ஊடக மாநாட்டில் பேசிய ரவிப்ரிய, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடாக்சின் மூலப்பொருட்கள் தேங்காய் எண்ணெயில் மட்டுமல்ல, இறக்குமதி செய்ய்படும் மிளகாய், சீனி, பால் தூள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தில் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
எனினும், அனைத்து பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, மனித உடலுக்கு தீங்கற்றவை மாத்திரமே விடுவிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
புற்றுநோயை ஏற்படுத்தும் மூலப்பொருட்களுள்ள தேங்காய் எண்ணெயை மீண்டும் ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் மொத்த அளவை சுங்கம் அறிந்திருப்பதாகவும், அதை கணினியிலிருந்து அழிக்க முடியாது என்றும், அதே அளவைச் சேர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறினார்.
தரமற்ற தேங்காய் எண்ணெயின் இறக்குமதிக்கு பொறுப்பான இறக்குமதியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.