சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து மதுவெறுப்பு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் இன்று அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து, தனிமைப்படுத்தல் விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1