எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனமொன்று, அதன் இரண்டாவது தர ஆய்வில் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ்லடொக்சின் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக காணப்படுவதால் தர ஆய்வு அறிக்கை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த நிறுவனம் இறக்குமதி செய்த எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மூன்று நிறுவனங்கள் தமது மாதிரிகளின் இரண்டாம் தர ஆய்விற்கு மேன்முறையீடு செய்துள்ள நிலையில் அவற்றின் அறிக்கைகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளன.
எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யின் மாதிரிகளின் மறு பரிசோதனை தற்போது பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை தர நிர்ணய நிறுவனம், சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் இந்த மறு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இறக்குமதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக இவ்வாறு குறித்த மாதிரிகள் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.