விருதுநகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த குடிபோதையிருந்த நபர்கள் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் கருமாரி மடத்தில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பாஜகவைச் சேர்ந்த நடிகை நமிதா பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது கூட்டத்திலிருந்த போதை ஆசாமி ஒருவர் திட்டங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் எனக் கிண்டல் செய்தார்.
இதையடுத்து அவரை அருகிலிருந்த பாஜக ஆதரவாளர் எச்சரித்துள்ளார். எனினும் அருகிலிருந்தவர் பேச்சைக் கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த ஆசாமி நமிதா பேச்சிற்குத் தொடர்ந்து கவுண்டர் கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாகப் போதை ஆசாமிக்கும் பாஜக ஆதரவாளருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது