யாழ் மாவட்டத்தில் இன்று 143 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 743 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 127 பேருக்கு தொற்று உறுதியானது. திருநெல்வேலி சந்தையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களே இவர்கள்.
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ்ப்பாண மாநகரசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர் நாவாந்துறையை சேர்ந்தவர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், பரிசோதித்த கைதடியை சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் திருநெல்வேலி பொதுச்சந்தையுடன் தொடர்புடையவர்.