26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது.

நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 15 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 2,834 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 324 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 87,630 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 435 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

Leave a Comment