இலங்கை

இன்றும் 5மரணங்கள்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 5 பேரின் மரணங்கள் இன்று (22) அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், நாட்டில் பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

வேஉட பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (21) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, இருதய செயலிழப்பு, உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், வெலிமட ஆதார வைத்தியசாலையில் இருந்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான ஆண் ஒருவர், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, இருதய நோய் நிலை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான ஆண் ஒருவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்வை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த மார்ச் 16ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர நிமோனியா நிலை மற்றும் கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மீன்களை காணோம்; குளத்தை குத்தகைக்கு எடுத்தவருக்கு அதிர்ச்சி: மன்னாரில் நடப்பதென்ன?

Pagetamil

தங்கொட்டுவவில் மீட்கப்பட்ட தேங்காய் எண்ணெயிலும் அஃப்லரொக்ஸின்!

Pagetamil

காணாமல் போன பாடசாலை மாணவனை தேடும் பணி தீவிரம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!