ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமென கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தன தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருமளவில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறன, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள் திடீரென அதிகரிப்பது தம்மை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்றும், தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிறுவனங்கள் சார்பில் சனத் விஜேவர்தன மனுவை தாக்கல் செய்தார்.
தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு பெரும் வரி செலுத்த வேண்டும் என்றும், இந்த ஊதிய உயர்வு நிறுவனங்களைநெருக்கடியில் ஆழ்த்தக்கூடும் என்றும், அரசாங்கத்தின் இந்த திடீர் சட்டவிரோத முடிவால் தோட்டத் தொழில் நெருக்கடியில் இருக்கக்கூடும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார். இதனால், அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கும்படி கோரியுள்ளனர்.