இலங்கை தேசியக் கொடியின் உருவம் பொறித்த கால் மிதிகள் தயாரித்தமை தொடர்பில் இலங்கை அரசின் எதிர்ப்பை , அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம், அமேசன் தலைவருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தொடர்புடைய பிரிவுக்கு நிலைமையை தெரிவிக்க தூதரகம் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பொருளில் கொடியைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசனின் ஈ-கொமர்ஸ் தளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1