பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை இன்று சனிக்கிழமை (13) மதியம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் மன்னார் மாவட்டத்திற்கான முதலாவது வியஜம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பின் போது மன்னார் மக்களின் பொருளாதார நிலையினை எவ்வாறு உயர்த்தலாம் என்றும், இந்தியாவுக்கும் தலைமன்னாருக்குமிடையில் கப்பல் சேவையைப் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீண்டும் அழைத்து வருவது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் உதவிகள் தொடர்பாகவும், மன்னாரிலுள்ள கனிய வழங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.