29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

வடை சாப்பிட மட்டுமே வாய் திறக்க அனுமதி: இந்திய தூதருடனான சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு நேர்ந்த கதி!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13) காலை 9.30 முதல் சுமார் அரை மணி நேரம் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசக்கூடாது என சந்திப்பிற்கு முனன்னதாகவே “கட்டளை“ பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரும் பேசவில்லை என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இந்த கூட்டத்தில் அழைக்கப்பட்டிருந்த கூட்டமைப்பின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மாத்திரம் பேசினார்கள்.

பிரதேசசபைகளின் தவிசாளர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மாத்திரம் தமது பகுதி பிரச்சனைகளை கூறினார்கள்.

இந்த சந்திப்பு குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழ் மக்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, வடை சாப்பிட மட்டும் வாய் திறந்தேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் உங்களை (நாடாளுமன்ற உறுப்பினர்களை) பேச வேண்டாம் என யார் உத்தரவிட்டார்கள் என தமிழ் பக்கம் வினவியபோது, அது குறித்து பெயர் குறிப்பிட்டு தான் பேச விரும்பவில்லையென்றும், தனது கட்சியை சேர்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அதை தன்னிடம் கூறினார் என்றும், கடந்த தேர்தலில் தாம் இணைந்து பணியாற்றியதன் அடிப்படையில் சர்ச்சையை வளர்க்க விரும்பாமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் கீழ் மட்ட உறுப்பினர்களால் தத்தமது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கூறப்பட்டது.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம்,
தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை உள்ளிட்ட விடயங்கள் கூறப்பட்டது. தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம் பெறும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.

கூட்டமைப்பின் கருத்தை கேட்ட இந்திய தூதர், இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முன்னர் இருந்த அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறது என்றார்.

30 நிமிடத்திற்கு உட்பட்ட சந்திப்பு என்பதால், மேலதிக விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கொழும்பில் பேசிக்கொள்கிறேன் என கூறி இந்திய தூதர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சந்திப்பு குறித்து ாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்-

What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment