இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளை மையப்படுத்திய புதிய கொரோனா உபகொத்தணி உருவாகும் அபாய நிலை தென்படுகிறது.
யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச சாலைகளில் இதுவரை 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அந்த சாலையில் மேலும் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று வெளியான பிசிஆர் முடிவுகளில் மேலும் இருவர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அதுதவிர, நேற்று கோண்டாவில் இ.போ.ச சாலைக்குள்ளும் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
சாரதிய பயிற்சி வழங்குபவர் ஒருவரும், சாலை அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருமே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
யாழில் இரண்டு சாலைகளிற்குள் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளமை புதிய கொத்தணி அபாயத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இ.போ.ச கூட்டங்களில் தொற்றிற்குள்ளாகியவர்கள் கலந்து கொண்டிருந்ததால் முக்கிய அதிகாரிகள் பலர் தனிமையில் இருக்கும் நிலையில். இ.போ.ச சாலைகளில் பிசிஆர் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.