கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கத்திக்குத்துக்கு இலக்கான அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துஷ்யந்தன் (21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடைய பிறந்த தினம். வீட்டு வாசலில் நின்ற அவரை 18 வயதை பூர்த்தி செய்யாத இருவர், கூரிய ஆயுதத்தினால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1