ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இராணுவ வீரர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த சிப்பாயின் திருமணத்தில் நேற்று கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி, “வீரர்கள் எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது நடந்து கொண்டிருக்கும் யு.என்.எச்.ஆர்.சி அமர்வுகளில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசு எடுத்துள்ள முயற்சிகளில் நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை செய்யக்கூடிய மற்றும் செய்ய முடியாத சில விஷயங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், மனிதாபிமான நடவடிக்கையின் போது நாங்கள் எவ்வளவு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
“நாங்கள் சாதாரண மக்களைப் பாதுகாக்காமல் யுத்தம் செய்திருந்தால், மே 18, 2009 ஐ விட முன்னதாகவே யுத்தத்தை முடித்திருக்க முடியும்” என்று இராணுவத் தளபதி கூறினார்.
“”பயங்கரவாதிகள் அப்பாவி தமிழ் பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், உயிரிழப்புகளைக் குறைப்பதற்காக நாங்கள் மிகவும் நிதானத்துடன் செயல்பட்டோம், அதனால்தான் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
இறுதியில் உண்மை மேலோங்கும் என்பதை நாம் அறிவோம். எதிர்காலத்தில், நிதி ஆதாயத்திற்காக எங்களுக்கு எதிராக செயல்படும் அந்த நிறுவனங்கள், நாங்கள் செய்ததை உணர்ந்து, இறுதியில் நாம் செய்த தியாகங்களுக்கு எங்களை பாராட்டுவார்கள்“ என்றார்.