யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து உள்ளதாக தெரிவித்து அந்தப் பகுதி சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் தேடுதலுக்கு உட்படுத்தபட்டுள்ளது.
நல்லூர் செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் பாசையூர் பகுதியில் கைத்துப்பாக்கியொன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், பொலிஸார் அது தொடர்பான விசாரணையில் ஈடுபடுத்தப்படவில்லையென அறிய முடிகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1