2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில் கலந்து கொள்ளும் மககள் கருப்பு நிற உடையணிந்து வருமாறு கோரியுள்ளது.
ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரமான காலை 8.45 மணிக்கு தோலயங்களில் மணி ஒலிக்கும். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெறும்.
ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளுக்குப் பிறகு அமைதியான போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1