27.7 C
Jaffna
September 22, 2023
குற்றம்

யாழ் நகரில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசம்: பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ் நகரில் நள்ளிரவு வேளை இனம்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் வந்த ரௌடிக் கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி, வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.

வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

Pagetamil

அன்ரி வயது பெண்ணில் ஆசைப்பட்ட 16 வயது மாணவன்: அந்தரங்க உறுப்பில் மிளக்காய்த்தூள் தூவப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

Pagetamil

சுற்றுலா விசாவில் இலங்கை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

Pagetamil

அன்ரிகளில் ஆசைப்பட்டால் இதுதான் கதி: 16 வயது மாணவன் கடத்தப்பட்டு அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூள் தூவப்பட்டது!

Pagetamil

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!