25.8 C
Jaffna
December 11, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இனி இணைந்து செயற்பட மாட்டோம்: முன்னணி அறிவிப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே இவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.

எனவே அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் பாராளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

east pagetamil

வடக்கில் மர்ம நோயால் அடுத்தடுத்த உயிரிழப்புக்கள்… காரணத்தை விளக்கும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம்!

Pagetamil

மீண்டும் 4-5 மணித்தியால மின்வெட்டு?: ஆட்சி மாறினாலும் மாறாத மின் மாபியா!

Pagetamil

அது அரசியல் திருட்டு: ஐ.தே.க குமுறல்

Pagetamil

அடிப்படை அறிவேயில்லாமல் சேட்டை விட்ட அர்ச்சுனா: யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment