உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று (7) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இந்தியாவின் புனே, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து தடுப்பூசிகளை ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
தடுப்பூசிகள் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் சரக்கு சேமிப்பு பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ள, கொரோனா வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
தடுப்பூசி செயற்திட்டம் குறித்த அறிக்கை உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகு கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இரண்டாவது கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படும்.
கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 1.4 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கை பெறும். முதற்கட்டமாக நேற்று 264,000 தடுப்பூசிகளை பெற்றுள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்த, கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும்.