29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

யாழ் கார்கில்ஸில் படம் பார்க்கப் போனவர்கள் கொரோனா அறிகுறியிருந்தால் தொடர்பு கொள்ளவும்!

யாழ்ப்பாணம் நகரிலுள்ள கார்கில்ஸ் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் அந்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக சென்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனாலேயே யாழ்ப்பாணம் நகர் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!