மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Date:

கொரோனா தொற்றிற்குள்ளாகிய மேலும் 4 மரணங்கள் இன்று (4) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், மத்துகமை மாவட்ட வைத்தியசாலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 09 (தெமட்டகொடை) பிரதேசத்தைச் சேர்ந்த, பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை, புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (06) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சிறுநீரக தொற்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்