மன்னாரில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மன்னார், சாந்திபுரம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில், மன்னார்- கொழும்பு புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார் மீன் சந்தை கட்டட தொகுதியில் மீன் விற்பனையில் ஈடுபடும், சாந்திபுரத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சடலம் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரது பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
அவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை அது தகனம் செய்யப்படவுள்ளது.