மட்டக்களப்பில் 04வது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Date:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 04வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பலக்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆரவினை நல்கி வருகின்றனர்.

வடகிழக்கில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும், அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் சரியான முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 04வது நாளான இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில்...

இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்